அல்ஹம்துலில்லாஹ்

அஸ்ஸலாமு அலைகும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு,

துல்கஃதா தலைப்பிறை

Monday, September 2, 2013

துல்கஃதா தலைப்பிறை பார்த்தலை இலகுபடுத்தல்

துல்கஃதா தலைப்பிறை பார்த்தலை இலகுபடுத்தல்

இலங்கையில் தலைப்பிறை பார்த்தலும் அதனைக் கொண்டு புதிய மாதத்தை ஆரம்பிதத்தலும் எனும் விடயம் சர்ச்சைகளோடு தொடர்ந்து கொண்டிருப்பதனை நாம் அனைவரும் அறிவோம். இந்தச் சர்ச்சைக்கு முத்தாய்ப்பு இடுவதற்கு என்னாலான பங்களிப்பைச் செய்வதற்கான ஒரு முயற்சியே இதுவாகும்.

இம்முறை ஹி 1434 துல்கஃதா மாதத்திற்கான தலைப்பிறை எவ்வாறு தோற்றம் தரப் போகின்றது என்பதனை பருமட்டான வரைபடமாக வரைந்து இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். முடியுமானவர்கள் இந்தத் தகவல்களை உங்களது நண்பர்கள் உறவினர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

இங்கே இலங்கையின் கிண்ணியா நகரின் அமைவிடத்துக்காக இக்கணிப்பீடுகளும் வரைபும் மேற்கொள்ளளப்படுகின்றன.

இவ்வருடம் ஷவ்வால் மாதத்தின் 29ம் நாள் 06.09.2013ம் திகதி வெள்ளிக் கிழமையாகும். இத்தினம் தலைப்பிறை பார்ப்பதற்குரிய நாளாகும்.

ஷவ்வால் மாதத்தின் இறுதியில் ஏற்படும் அமாவாசை கிண்ணியா நகரில் வியாழக்கிழமை (05) மாலை 06.42 மணிக்கு இடம்பெறுகின்றது. அன்றைய தினம் கிண்ணியாவில் சூரிய அஸ்த்தமனம் மாலை 06.11 மணிக்கும் சந்திர அஸ்த்தமனம் மாலை 06.00 மணிக்கும் இடம்பெறுகின்றது. அதாவது சூரியன் மறைவதற்கு 11 நிமடங்கள் முன்னதாகவே சந்திரன் மறைந்துவிடுகின்றது. ஆதலால் 05ம் திகதி வியாழக் கிழமை துல்கஃதா தலைப்பிறை தென்பட முடியாதாகும். கிண்ணியாவில் மட்டுமல்ல உலகில் எந்தப் பகுதியிலும் இத்தினத்தில் அவ்வப்பகுதிகளின் சூரிய அஸ்த்தமனத்துக்குப் பின்னர் தலைப்பிறை தென்பட முடியாது.

06ம் திகதி வெள்ளிக்கிழமை கிண்ணியாவில் சூரிய அஸ்த்தமனம் மாலை 06.11 மணிக்கும் சந்திர அஸ்த்தமனம் மாலை 06.43 மணிக்கும் இடம்பெறுகின்றது. அதாவது சூரியன் அஸ்தத்தமித்ததன் பின்னர் 33 நிமிடங்கள் சந்திரன் கிண்ணியாவின் மேற்கு வானில் பயணம் செய்யும்.

உங்களது கடிகாரம் இலங்கையின் நியம நேரத்தைச் சரியாகக் காட்டுகின்றதா என்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.

திசையறி கருவி ஒன்றையும், நீங்கள் காணும் தலைப்பிறையை ஒளிப்படம் எடுப்பதற்கு தயாராக ஒரு ஒளிப்படக் கருவியையும் முடியுமானவர்கள் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். (திசையறி கருவியை தற்காலத்தில் கைத்தொலைபேசிகளில் download செய்து கொள்ளலாம்.)

உச்சி வானில் இருந்து தொடுவானம் வரையான கோணம் 90 பாகை என்பதனைக் அளவிடையாகக் கருத்தில் கொண்டு மேற்கு வானத்தை கூறுகளாகப் பிரித்துக் கொண்டு தலைப்பிறை பார்ப்பதற்குத் தயாராகுங்கள்.

நீங்கள் நிற்கின்ற புள்ளியை தரையில் அடையாளமிட்டுக் கொள்ளுங்கள். திசையறி கருவி வைத்திருப்பவர்கள் நீங்கள் நிற்கின்ற புள்ளியில் திசையறி கருவியை வைத்து திசைகாட்டி மேற்குத் திசையைக் குறித்துக் கொள்ளுங்கள்.

தொடுவானில் திசைகாட்டி மேற்குத் திசையில் இருந்து உங்களுக்கு வலப் புறமாக (வடக்கு நோக்கி) சூரியன் மறைவதனை அவதானியுங்கள். சூரியன் மறைகின்றபோது அந்தப் புள்ளியை ஒரு மரம் அல்லது நட்சத்திரம் அல்லது ஒரு தடியைக் கொண்டு அடையளமிட்டுக் கொள்ளுங்கள். திசை காட்டி மேற்கிலிருந்து சூரியன் மறைகின்ற புள்ளி 6.5 பாகையாகும்.

சூரியன் மறைகின்ற கணத்தில் சந்திரனானது திசைகாட்டி மேற்கிலிருந்து உங்களுக்கு இடது புறமாக (தெற்கு நொக்கி) 3 பாகை தூரத்திலும், தொடுவானிலிருந்து 7 பாகை உயரத்திலும் அமைந்திருக்கும்.

அதாவது திசைகாட்டி மேற்கிலிருந்து வடக்காக சூரியன் அஸ்த்தமிக்கின்ற புள்ளிக்கு இடைப்பட்ட தூரத்தைப் போல அரைவாசித் தூரம் தெற்காகவும், முழுத் தூரமளவு உயரத்திலும் சந்திரன் அமைந்திருக்கும்.

தலைப்பிறை இலகுவாக வெற்றுக் கண்களுக்கு தென்படக் கூடிய அதி உச்சமான சிறப்பு நேரம் மாலை 06.25 மணியாகும். இந்தக் கணத்தில் சூரியன் அஸ்த்தமிக்கும் போது அமைந்திருந்த இடத்திலிருந்து தாழ்வாக 3.5 பாகை உயரத்தில் அமைந்திருக்கும். இது சூரியன் அஸ்த்தமிக்கும் போது சந்திரன் அமைந்திருந்த உயரத்தின் அரைவாசியாகும்.

மேலதிக விபரத்திற்கு இணைக்கப்பட்டிருக்கும் வரைபடங்களைப் பார்க்கவும்.

குறிப்பு.
1. சூரியன் அஸ்த்தமிப்பதற்கு முன்னர் (மாலை 06.11) தலைப்பிறை தென்பட முடியாது.
2. சந்திரன் அஸ்த்தமித்ததன் பின்னர் (மாலை 06.43) தலைப்பிறை தென்பட முடியாது.
3. சூரியன் மறைந்த புள்ளிக்கு வலப்புறமாக தலைப்பிறை தென்பட முடியாது.
4. திசைகாட்டி மேற்குத் திசைக்கும் சூரியன் மறைந்த புள்ளிக்கும் இடைப்பட்ட வானில் தலைப்பிறை தென்பட முடியாது.

மேற்படி விடயங்களைக் கருத்தில் கொண்டு தலைப்பிறை பார்ப்பதனை திருத்தமாக்கிக் கொள்ளுங்கள். தலைப்பிறை தென்பட்டால் இரண்டு விடயங்களைச் செய்யுங்கள்.
1. தீர்மானம் எடுப்பதற்காக தலைமைப் பீடத்திற்கு நேரகாலத்தோடு ஆதாரங்களுடன் அறியத்தாருங்கள்.
2. தென்பட்ட தலைப் பிறையை ஒளிப்படம் எடுத்தவர்கள் அப்படங்களை caf.org@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்களது ஒளிப்படக் கருவியின் மாதிரியை குறித்தனுப்ப மறக்க வேண்டாம்.
Dr. Aqil Ahmad S.

Wednesday, August 21, 2013

ஊடக அறிக்கை - 1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக..

ஊடக அறிக்கை
09.10.1434
17.08.2013

1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக..

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதனது கிண்ணியா மற்றும் திருகோணமலை மாவட்டக் கிளையுடன் இணைந்து வெளியிடும் அறிக்கை.

இலங்கையில் தலைப்பிறை பார்த்தல் தொடர்பாக கடந்த காலங்களில் வேறுபட்ட நிலைப்பாடுகள் இருந்து அதனால் வந்த சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த 2006ஆம் ஆண்டு  சகல தரப்பு உலமாக்களினது அங்கீகாரத்தோடும் உடன்பாட்டோடும் ஐந்து தீர்மானங்களை மேற்கொண்டது என்பதையும் முஸ்லிம் சமூகம் அறிந்துவைத்துள்ளது என நம்புகிறோம்.

இத்தீர்மானங்களின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டுகளில் தலைப்பிறைத் தொடர்பான முடிவுகள் பெறப்பட்டு வந்தன. இவ்வாண்டு றமழான் மாதத் தலைப்பிறையும் ஷவ்வால் மாதத் தலைப்பிறையும் வழமைபோல் குறித்த தீர்மானங்களின் அடிப்படையிலேயே முடிவ செய்யப்பட்டன. ஆயினும் இம்முறை ஷவ்வால் மாதத் தலைப்பிறை முடிவு செய்யும் விடயத்தில் பிறையை வெற்றுக் கண்ணால் கண்ட சாட்சிகளை உறுதிசெய்யும் விடயத்தில் உலமாக்களுக்கு மத்தியில் முரண்பாடு தோன்றியமை உண்மையாகும்.

இவ்வாறு குறித்த விடயத்தில் சில உலமாக்கள் முரண்பட்ட போதிலும் தலைப்பிறையைக் கண்டதாக கூறிய சாட்சிகளை தீர விசாரித்து உறுத்திப்படுத்தியதைத் தொடர்ந்து பிறையைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்ற பெரிய பள்ளிவாயல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் சமயப் பண்பாட்டலவல்கள் திணைக்களம் ஆகிய முப்பெரும் நிறுவனங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துவோரின் ஏகமனதான உடன்பாட்டுடன் இவ்வருட ஷவ்வால் மாதத் தலைப்பிறை 09.08.2013 ஆந்திகதி வெள்ளிக் கிழமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் கிண்ணியாவில் பிறை காணப்பட்டதான செய்தி அப்பிரதேச உலமாக்களோடு 17.08.2013.08.17ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது உறுதிபடக்கூறப்பட்டது. பிறைகாணப்பட்டதை உறுதி கொண்ட மக்கள் பெருநாள் கொண்டாடியதை சரியெனவும் மற்றோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் அறிவித்தலின்படி நோன்பை நிறைவேற்றியவர்களும் சரியாகவே நடந்துள்ளனர் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இது பற்றி உலமா சபைத் தலைவர் அவர்கள் 2013.08.08 ஆம் திகதி 01:00 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவையில் ஆற்றிய உரையின் சில வார்த்தைகள் கிண்ணியா மூதூர் பிரதேச மக்களுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது என்பதை உணர்ந்த தலைமையகம் வருந்திக் கொள்கிறது.

இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இந்தச் சபையில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு செயற்பட இரு சாராரும் இணங்கி இதனை பகிரங்கப்படுத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

Tuesday, March 12, 2013

ஹலால் ஊடகவியலாளர் மாநாடு..............


ஹலால் விட்டு கொடுக்க படவில்லை குறியீடுதான் இல்லாமல் போயுள்ளது. 
தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படுவது முஸ்லிம்களான ஒவ்வொருவரின் மீதும் கட்டாயக்கடமையாகும்..அகில இலங்கை ஜமியதுல் உலமா சபை இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் மதிப்பிற்குறிய தலைமையாகும், நாம் உங்களின் ஹலால் தொடர்பான முடியவை பெறு மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம், இருதி வரை உறுதியாய் உங்களுடன் இருப்போம்..இன் ஷா அல்லாஹ்!! 

முஸ்லிம் மக்களின் நலன் கருதி இக்கட்டான சூழ்நிலையிலும் காத்திரமான முடிவை எடுத்திருக்கும் எமது உலமா சபையினருக்கு உளமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்!


ஹுதிபியா எவ்வாரு அன்று நபிகளாருக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்ததோ அதே போன்றதொரு வெற்றியை நிச்சயாமாக இந்த விட்டுக்கொடுப்பின் மூலமும் எதிர்ப்பார்ப்போம்.. இன் ஷா அல்லாஹ்!!

நிச்சயமாக அல்லாஹ் பொருமையாளர்களுடன் இருக்கிறான்



Wednesday, August 22, 2012

அம்பலம்

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு மருதமுனை கடற்கரை வெளியில் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு முறணான வகையில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வுகழுக்கு அனுமதி வழங்க பொலிஸ் மற்றும் பிரதேச செயலகம் என்பன மறுப்பு தெரிவித்த போதும், குறிப்பிட்ட இஸ்லாமிய பிரச்சார அமைப்பின் தலைவர் (மௌலவி) தனக்கு ஆதரவான ஒரு மஸ்ஜிதின் பெயரிடப்பட்ட கடிதத்தில் களியாட்ட நிகழ்வுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி கடிதம் ஒன்றை ஒரு தொகை பணத்தை வாங்கிக்கொண்டு வழங்கியுள்ளார். இதனால் மருதமுனையின் ஜம் இய்யதுல் உலமாசபை குறித்த நிகழ்வை நிறுத்த மேற்கொண்ட எந்தமுயற்சியும் கைகூடவில்லை. இதுதான் பித் அத்தை ஒழிக்கும் முறையா என மக்கள் வினவுகின்றனர்.

Monday, August 13, 2012

முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கும் வஹ்ஹாபிகள்


பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் இடம்


அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் இடம்

اللهم هداية للصواب

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும்ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்அவர்கள் கிளையார்கள்தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!

பெருநாள் தினம் மகிழ்ச்சியையும்சகோதரத்துவத்தையும்மனித நேயத்தையும் வெளிப்படுத்தும் ஒரு தினமாகும். அத்தினத்தில் சந்தோஷத்தை வெளிப்படுத்தி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துமுகமாக அவனைப் புகழ்ந்துதொழுவது நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும்.

பெருநாள் தொழுகை எந்த இடத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனும் விடயத்தில் அறிஞர்களிடத்தில் இரண்டு கருத்துகள் நிலவுகின்றன. ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் தவிர்ந்த மற்றைய அறிஞர்கள் பெருநாள் தொழுகை மக்காவைத் தவிர உள்ள ஏனைய இடங்களில், முற்றவெளியில் நிறைவேற்றப்படுவது ஸுன்னத் எனவும்நிர்ப்பந்தமான சூழ்நிலைகள் தவிர்ந்த மற்றைய சந்தர்ப்பங்களில் மஸ்ஜிதில் தொழுவது மக்ரூஹ் எனவும் கூறுகின்றனர்.

ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களைப் பொறுத்தவரையில் ஓர் ஊரின் மஸ்ஜித் மக்களுக்குப் போதுமானதாக இருக்குமாயின் மற்றைய இடங்களில் தொழுவதைவிட மஸ்ஜிதில் தொழுவதே மிகச் சிறப்பானதாகும். ஏனெனில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் முற்றவெளியை நாடிச் சென்றது ஊர்மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று சேர வேண்டுமென்ற நோக்கத்தினாலாகும். அந்நோக்கம் மஸ்ஜிதில் கைகூடிவிட்டால் அங்கு தொழுவதே சாலச் சிறந்தது என குறிப்பிடுகின்றனர். மேலும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மஸ்ஜிதில்இடவசதி போதாமை காரணமாகவே முற்றவெளிக்குச் சென்றார்கள் என்று ஸுனன் அல்-பைஹகீ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உமர் ரழியல்லாஹுஅன்ஹு அவர்களின் கூற்றை இக்கருத்துக்கு வலுவாக எடுத்துக் கொள்ளலாம்.

அதே நேரத்தில், ஓர் ஊரின் மஸ்ஜித் மக்களுக்குப் போதுமானதாக இல்லாவிடின் முற்றவெளியில் தொழுவது ஸுன்னத் மாத்திரமின்றி இந்நிலையில் மஸ்ஜிதில்தொழுவது (மக்ரூஹ்) பொறுத்தமற்றதாகும். எனினும், மஸ்ஜித் மக்களுக்குப்

போதுமானதாக இருக்கும் நிலையில் முற்றவெளியில் தொழுவதிலும் எந்தப் பிரச்சினையும் கிடையாது. மேலும், பெருநாள் தொழுகைக்காக முற்றவெளிக்குச் செல்ல முடியாத நிலையிலுள்ள பலவீனமானவர்கள்நோயாளிகள் போன்றோர்கள் இருப்பின் அவர்களுக்காக மஸ்ஜிதில் தொழுகை நடாத்த ஒருவர் இமாமாக நியமிக்கப்பட வேண்டும். ஏனெனில், பலவீனமானவர்களுக்கு மஸ்ஜிதில் பெருநாள் தொழுகை நடாத்துவதற்கு அலி றழிலியல்லாஹுஅன்ஹு அவர்கள் அபூ மஸ்ஊத் அல்-அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹுஅவர்களை நியமித்தார்கள் என்ற அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் செயலை இமாம் ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவித்துள்ளதாக இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் "அல்-மஜ்மூஃவின் பெருநாளுடைய பாடத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.


மேற்கூறப்பட்ட நபி மொழிகள், அவற்றிற்கான மார்க்க அறிஞர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது.

01. தமது ஊரில் உள்ள மஸ்ஜித் அவ்வூர் மக்கள் அனைவரும் ஒன்றாகத் தொழுமளவு போதிய இடவசதி கொண்டதாக இருக்குமாயின் அம்மஸ்ஜிதில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது பொருத்தமானது. அவ்வாறில்லாத பட்சத்தில் முற்றவெளியில் நிறைவேற்றுவதே மிகப்பொருத்தமான விடயமாகும்.

02. பெருநாள் தொழுகைக்காக மஸ்ஜிதிலோ அல்லது முற்றவெளியிலோ பெண்களும் சமுகமளிக்குமிடத்து பின்வரும் ஒழுங்குமுறைகளைப் பேணிக்கொள்வது மிக மிக அவசியம்.

* இஸ்லாமிய ஆடை ஒழுங்குகளுடன் சமுகமளித்தல்.

*மணம் பூசுவதைத் தவிர்ந்து கொள்ளல்.

*அலங்கார ஆடைகள்ஆபரணங்கள் போன்றவற்றை மற்றவர்களுக்குத்   தெரியும்படி அணியாதிருத்தல்.
      
* ஆண்பெண் கலப்பதைத் தவிர்க்க மறைப்பை ஏற்படுத்தல்.

* பெண்கள் தனியாக சமுகமளிக்காது, மஹ்ரமான ஆண்களுடன் அல்லது              கூட்டாக பெண்களுடன் சமுகமளித்தல்.

*வரிசைகளைச் சீர்செய்வதில் கவனம் செலுத்துதல்.

*ஆண்கள், பெண்கள் பிரவேசிக்க வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்துதல்.

*பெண்கள் தொழுகை முடிந்தவுடன் தாமதியாமல் அவசரமாகத் தத்தமது வீடுகளுக்குச் சென்றுவிடல்.

 *வாலிபப் பெண்கள் சமுகமளிப்பதனால் பித்னா ஏற்படும் எனப் பயந்தால் அவர்கள் வருவது மக்ரூஹ் ஆகும்.

03. இவ்விடயத்தில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டுமெனவும் இதுவே இப்பெருநாளின் கருப் பொருளாகும் எனவும் ஊர்மக்களுக்கிடையில் பிரிவோ பிரச்சினையோ ஏற்படாவண்ணம் பொறுப்புடையோர்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டுமெனவும்  அ. இ. ஜ. உ.  மக்களைக் கேட்டுக்கொள்கின்றது. 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

Friday, August 10, 2012